/உள்ளூர் செய்திகள்/சென்னை/பார்வர்டு பிளாக் பொருளாளருக்கு நோட்டீஸ் : ஜெ., காலில் விழுந்ததால் கட்சி நடவடிக்கைபார்வர்டு பிளாக் பொருளாளருக்கு நோட்டீஸ் : ஜெ., காலில் விழுந்ததால் கட்சி நடவடிக்கை
பார்வர்டு பிளாக் பொருளாளருக்கு நோட்டீஸ் : ஜெ., காலில் விழுந்ததால் கட்சி நடவடிக்கை
பார்வர்டு பிளாக் பொருளாளருக்கு நோட்டீஸ் : ஜெ., காலில் விழுந்ததால் கட்சி நடவடிக்கை
பார்வர்டு பிளாக் பொருளாளருக்கு நோட்டீஸ் : ஜெ., காலில் விழுந்ததால் கட்சி நடவடிக்கை
ADDED : மே 24, 2010 11:23 PM
சென்னை : அகில இந்திய பார்வர்டு கட்சியின், மாநில பொருளாளர் மகேஷ்வரன் சென்னையில் ஜெயலலிதாவின் காலில் விழுந்து வணங்கியதால், அவரை கட்சியிலிருந்து, நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, அ.தி.மு.க..வுடன் கூட்டணி வைத்துள் ளது.
இதனையொட்டி மரியாதை நிமித்தமாக, இக்கட்சியின் மாநில பொதுச்செயலர் கதிரவனும், பொருளாளர் மகேஷ்வரனும், சமீபத்தில் போயஸ் தோட்டத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவை சந்தித்தனர். அப்போது மகேஷ்வரன், ஜெயலலிதாவின் காலில் விழுந்து ஆசி பெற்றார். இதனை பார்த்த கதிரவன் முகம் சுளித்தார். இச்சம்பவத்திற்கு பின், சென்னையிலிருந்து மதுரை சென்ற கதிரவன், கட்சியின் செயற்குழு கூட்டத்தை கூட்டி, இப்பிரச்னை குறித்து, முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்திற்கு பின், பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில், மகேஷ்வரனுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், "அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியை சேர்ந்த மகேஷ்வரன், சென்னையில் ஜெயலலிதாவின் காலில் விழுந்த காரணத்தால், கட்சியின் மானம் போய் விட்டது. நேதாஜி, முத்துராமலிங்க தேவர் உருவாக்கிய பார்வர்டு பிளாக் கட்சியில், பொருளாளராக மகேஷ்வரன் இருந்து கொண்டு, ஜெயலலிதாவின் காலில் விழுந்தது, பெருத்த அவமானம். இச்செயலால் ஏன் உங்களை கட்சியில் இருந்து நீக்கக் கூடாது' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.